குறிகட்டுவான் துறைமுகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக தரித்து விடப்பட்டுள்ள வடதாரகை படகினால் அதனூடாக பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இயந்திர கோளாறு காரணமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகு இதுவரை திருத்தம் செய்யப்படாமல் குறிபாட்டுவான் துறைமுகத்திலேயே தரித்து விடப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இருந்து வரும் படகுகள் வடதாரகை படகினை பாலமாக பயன்படுத்தி ஏற இறங்க வேண்டிய நிலை தொடர்கின்றது.
இதன்காரணமாக நோயாளர்கள், வயோதிபர்கள் மற்றும் தங்களது பொருட்களை பலத்த சிரமத்தின் மத்தியில் படகினை தாண்டி கொண்டு செல்ல வேண்டியுள்ளதுடன், ஆபத்து நிறைந்த பயணமாக காணப்படுகின்றது.
இதேவேளை நயினாதீவு செல்லும் பயணிகளும் இதனால் பாதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையினை பாரத்துக் கொண்டு தினமும் பயணிக்கும் பொறுப்பான அதிகாரிகளோ இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கைகளும்எடுக்கவில்லை என பயணிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.