‘வளமான நாடு அழகான வாழ்க்கை‘ திட்டத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறைச்சாலை மறுசீரமைப்பு பணிகள் இன்றையதினம் (செப்.04) காலை வேலைத்திட்டத்திற்கான பெயர்ப்பலகையினை போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களால் திரைநீக்கத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப்புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் – பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு குறிகாட்டுவான் துறைமுக நுழைவாயிற் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.


இதன்போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், கடற்றொழி்ல் நீரியல்மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வீதி அபிவிருத்திஅதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார்உத்தியோகத்தர்களும் வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மாவட்ட பொறியியலாளர்கள், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டபலரும் பங்கேற்றனர். கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

