குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தியின் நிர்வாக செயற்திட்டம் முன்னெடுப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குறிகட்டுவான் இறங்குதுறையினை   பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்திசெய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (ஒக்.01) அரசாங்க அதிபர்அலுவலகத்தில் நடைபெற்றது.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும்கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் 09.08.2025 அன்று  குறிகட்டுவான் இறங்குதுறைக்கு  நேரடியாக விஜயம் மேற்கொண்டு,  ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்  உரியஅறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர்நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இது அமைந்திருந்துகுறிப்பிடத்தக்கது.

இக்  கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர்,  மாவட்டஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களின்ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை  பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படைஅதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article