குருநகரில் நடைபெற்ற வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வு பேரணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குருநகர் தொடர்மாடியில் இருந்து ஆரம்பித்த வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வுப் பேரணி கடற்கரை வீதி வழியாக குருநகர் அரச வைத்தியசாலை வரை வணபிதா ஜோன்போல் தலைமையில் நேற்று(ஜூலை 3) திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்வி எமது உரிமை என்பதை வலியுறுத்தி இடம்பெற்ற இப்பேரணியில் வணபிதா டிக்சன், காந்தீயம் பத்திரிகை ஆசிரியர் எம். ஷாந்தன் சத்திய கீர்த்தி, ஆசிரியர்கள் மாணவர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வேண்டும் வேண்டும் கல்வி வேண்டும்! வேண்டும் வேண்டும் எதிர்காலம் வேண்டும், வேண்டாம் வேண்டாம் போதை வேண்டாம என்ற கோசங்களை மாணவர்கள் உரக்க ஒலித்த வண்ணம் இந்த வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Share this Article