கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் புதிய தொற்றாளர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில்
சில நாட்கள் தடைப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட பிசிஆர் பரிசோதனைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன.
குறித்த ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையிலேயே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில்,
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும்,
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில்,
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 07, 10, 11, 13, 14 வயதுகளை உடைய சிறுமிகள் 05 பேர், 8, 12 சிறுவர் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
அதேபோல யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 08, 15 சிறுமிகள் இருவர் 14 சிறுவன் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
சாவகச்சேரியில் அடையாளம் காணப்பட்டவர்களில் 6, 9 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவர், 12 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.