கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சிப் பட்டறை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சிப் பட்டறை இன்றையதினம்(மே 8) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க கிளையினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி வலயக் கல்வி பிரிவிற்குட்பட்ட முன்பள்ளியில் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்ற தெரிவு செய்யப்பட 60 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களுக்கான முதலுதவி மற்றும் அனர்த்த வேளைகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் போன்ற திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான செய்முறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்படன.

முதலுதவி பயிற்சி பட்டறையின் நிறைவில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், குறித்த முன்பள்ளிகளுக்கான முதலுதவிப் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நாளைய தினம் (மே 09) கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 40 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளது.

Share this Article