இன்ன்றைய தினம் (மே – 26) நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அண்மித்த பிரதேசத்தில் பனை மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் சில பிரதேசங்களுக்கு மின்சா இணைப்பு துண்டிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. நேற்றைய தினமும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் சில பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது.
துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து மிக விரைவாக பனைமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மின்சார இணைப்பு வேலைகள் மிக துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சார சபையினருடன் இணைந்து பிரதேச மக்களும் பங்களிப்பாற்றி வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.
மின்சார சபையில் எமது தீவகத்தில் ஆளனியினர் பற்றாக்குறையாக காணப்படுகின்ற போதும், மிக விரைவாக செயற்பட்டு வருகின்றனர்.
காற்றின் வேகம் இன்றைய காலையில் குறைவடைந்திருந்த தற்போது அதிகரித்து வரும்நிலமை காணப்படுகின்றது.