11.12.2024 புதன்கிழமை பிற்பகல் 3.45 மணி வானிலை அவதானிப்பு.
1. தற்போது முல்லைத்தீவு மணலாறுக்கு கிழக்காக 40 கி.மீ. தொலைவில்காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இரவுமுல்லைத்தீவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் கரையைக் கடக்கும்.
2. அடுத்த தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 13.12.2024 அன்றுஉருவாகுகின்றது.
3. மீண்டும் அடுத்த தாழமுக்கம் 20.12.2024 அன்று உருவாக்குகின்றது.
4. இவை இரண்டும் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. இவையும் இலங்கைக்கு குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்குஅண்மித்து வர வாய்ப்புண்டு.
5. இவை பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்.