காரைநகர் பெண் கொலைச் சம்பவம்: விசாரணையில் புதிய திருப்பம் – இருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சங்குப்பிட்டி பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக். 12) மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய சுரேஷ்குமார் குலதீபா என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலத்தின் மீது நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.

இந்தத் தகவல்களை அடுத்து தொடர்ந்துப் புலனாய்வு மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை நேற்று (ஒக். 15) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் எனவும், அவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article