யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்துநடாத்தும் நடமாடும் சேவையானது காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி. ந. ரஞ்சனா அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (ஒக். 07) காரைநகர்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இந்நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும்சேவைகள்(தேசிய அடையாள அட்டை),ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ்திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,மனிதவள அபிவிருத்திதொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்திதொடர்பான சேவைகள்

மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ),சமூகசேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசியசெயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள்,மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்குகண்புரை பரிசோதனை (Cataract) இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள்வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணன்கோவிந்தராசன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், உதவி மாவட்டசெயலாளர் ,மாவட்ட செயலக பிரதம கணக்காளர், காரைநகர் பிரதேச சபைசெயலாளர் , பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்தபொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.