காரைநகர் பிரதேச செயலகத்தின் புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக திரு. துரைசிங்கம் ஜெயந்தன்நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (ஒக். 10) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, அவர் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றியிருந்தார்.
புதிய நியமனத்தின்படி, திரு. ஜெயந்தன் வரும் திங்கட்கிழமை (ஒக். 13) அன்று காரைநகர் பிரதேச செயலகத்தில் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.