காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்ட கலந்துரையாடல் வட்டாரம் தோறும் காரைநகர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாடு வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் வட்டாரம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
ஷ
“நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்கினை” அடைவதன் அம்சமாக மக்கள் பங்கேற்புடனான திட்டங்களை வகுத்து செயற்படுவதே திட்டத்தின் பிரதான இலக்காகின்றது.
எனவே மக்கள் கலந்துரையாடல் வட்டாரம் 2,3,4 ஆகிய வட்டாரங்களில் முதற்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதற்கான அறிக்கைகள் இறுதி செய்யப்படுகின்றது.
இச் செயற்பாட்டின் மூலம் “மக்களால் மக்களுக்கான ஆட்சி” என்ற ஜனநாயக மாண்பு நிறைவேற்றப்படுவதுடன் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி இலக்கு(SDG) கொள்கையினையும் அமுலாக்க முடிகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.