காரைநகர் – சித்தன்கேணி – யாழ். பஸ் சேவை இன்று முதல் சீருக்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமான காரைநகர் முதல் மூளாய் டச்சுவீதி ஊடாக சித்தன்கேணி – யாழ்ப்பாணம் வரையான 785/1 இலக்க பஸ் சேவை இன்று (நவம்பர் 14) முதல் தினமும் மூன்று முறை சேவையாக விஸ்தரிக்கப்படுகின்றது.

இதன்படி தினமும் காலை காரைநகர் துறை முகத்திலிருந்து 6.25 புறப்படும் முதல் பஸ் மூளாய் டச்சு றோட் வீதிக்கு 7.10 மணியளவில் வந்தடைந்து 7.40க்கு யாழ்ப்பாணம் சென்றடையும். பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திலி ருந்து 7.45 ஆரம்பித்து சித்தன்கேணி டச்சு வீதிக்கு 8.45 மணியளவில் வந்து காரைநகர் துறைமுகத்தை 9.35க்குச் சென்றடையும்.

மீண்டும் இரண்டாவது சேவை அங்கிருந்து 10 மணிக்கு புறப்பட்டு 10.35 மணிக்கு டச்சு வீதிக்கு வந்து, 11.20 யாழ்ப்பாணதிற்கு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 1.30 புறப்பட்டு 2.05 க்கு டச்சு வீதியூடாக வருகை தந்து காரைநகர் துறைமுகத்தை 2.50 மணியளவில் சென்றடையும்.

மூன்றாவது சேவையா காரைநகரி லிருந்து 3.00 மணிக்கு புறப்பட்டு 3.35 மணிக்கு டச்சு வீதி ஊடாக யாழ்ப்பாணத்தை 4.20க்குச் சென்றடையும். அங் கிருந்து 4.45 புறப்பட்டு 5.20 க்கு டச்சு வீதியீடாக காரைநகர் துறைமுகம் 6.05க்குச் சேரும்.

தினமும் இந்நேரப்படி சேவை இடம்பெறும், இந்த சேவை காரைநகர் – மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி, யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட் டைச் சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் நேர காலத்தை கவனத்தில் கொண்டு இந்தச் சேவையை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Share this Article