காரைநகர் கடற்பாதையின் ஓட்டி போதையில் அரச ஊழியரை தாக்கிய அட்டகாசம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் பொது இடத்தில் அரசாங்க ஊழியரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (ஜூலை 25) பிற்பகல் 4.30 மணியளவில் ஊர்காவற்துறையிலிருந்து காரைநகர் நோக்கி பயணிக்கும் பாதையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடல் பாதையில் கடமை நேரத்தில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் பயணத்தில் இருந்த அரசாங்க ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியரை தாக்கியுள்ளார்.

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மது போதையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணியாளர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Share this Article