காரைநகர் பிரதேசசபையின் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “வளமான நாடு – அழகான வாழ்க்கை – மறுமலர்ச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (செப். 15) நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராஜா மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக பிரதேசசபை அறிவித்துள்ளது.
இந்நடமாடும் சேவையில், காரைநகர் மக்களுக்கு பல்வேறு துறைகளின் சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படவுள்ளன. இதில்,
-
பிரதேசசபையின் ஆதனபெயர் மாற்றம், கட்டட அனுமதி, வியாபார உரிமம்,
-
பிரதேச செயலகத்தின் பிறப்புச் சான்றிதழ், நலன்புரி நன்மைகள், வீட்டுத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள்,
-
சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், ஆயுள்வேத மருந்தகம், இலங்கை வங்கி, கமநல சேவைத்திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சேவைகள் அடங்கும்.
மேலும், அன்றைய தினம் இரத்ததான முகாமும் நடத்தப்படவுள்ளது என காரைநகர் பிரதேசசபை தெரிவித்துள்ளது.