காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொல்லன்கலட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகிர்தராசா நிதர்சினி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மூன்று நாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தெல்லிப்பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை வலிகாமம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிலங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டது.

Share this Article