கடந்த சில நாட்களாக சந்தையில் மிக அதிகமாக இருந்த காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர்.
மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருகிறது. இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ போஞ்சி 300 ரூபாவுக்கும், காரட் 1 கிலோ 300 ரூபாவுக்கும், முட்டைக்கோஸ் கிலோ 320 ரூபாவுக்கும், தக்காளி கிலோ 300 ரூபாவுக்கும், கத்திரிக்காய் கிலோ 150 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் கிலோ 300 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com