பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் கெட்டம்பே பிரதேசத்திலுள்ள மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேரதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்த போது, அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பொலிஸில் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து, தேடுதல் வேட்டையில் போது ஆற்றிலிருந்து மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.