காங்கேசன்துறையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!- இருவர் தப்பியோட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா மீட்கப்பட்டது. கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட கஞ்சாவையும், கைதான இளைஞரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் கடற்படையினர் கையளித்தனர்.

கைதான நபரிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Share this Article