களவாடப்பட்ட சோளர் மின் விளக்குகளின் பாகங்கள் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வல்லை பகுதியில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளர் மின் விளக்குகள் களவாடப்பட்டுள்ள நிலையில், மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபையினால் நேற்று (22 டிசம்பர்) மீட்கப்பட்டுள்ளன.

அண்மையில் கரவெட்டி பிரதேசசபையினால் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் களவாடி செல்லப்பட்டிருந்தது. இந்தநிலையில் பொதுமக்களின் நன்மை கருதி பொருத்தப்பட்ட மின் விளக்குகளை, பொதுமக்களே பாதுகாக்க தவறுகிறார்கள் என கவலை வெளியிட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சகல சோளர் விளக்குகளையும் அகற்றி வேறு தேவையான இடங்களுக்கு பொருத்த தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

Share this Article