கல்விப் பொதுத் தராதர உயர்தரம், புலமைப் பரிசில் ஆகிய இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டப்படி, குறிக்கப்பட்ட திகதிகளில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடைபெறுமென கல்வியமைcச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றை அறிவிப்பின்படி திட்டமிட்டவாறு ஒக்டோபர் 11ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன் 12ம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது