இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 11) கா்ப்பினித் தாய்மாா்களுக்கான இலவச செயலமா்வு கருத்தரங்கும் இடம் பெற்றதுடன், உலா் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைத் தலைவா் திரு.எட்வேட் அருந்தவ சீலன் அவா்கள் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச மகப்பேற்று தாதியா்கள் கலந்து கொண்டு சுகாதார கருத்துக்களை வழங்கினா்.
கருத்தரங்கினை தொடா்ந்து 30 கா்ப்பினித் தாய்மாா்களுக்கான உலா் உணவுப் பொருட்கள் (NFRI) வழங்கி வைக்கப்பட்டது. கொவிட் 19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இடம் பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் நெடுந்தீவு பிரதெச பொது சுகாதார பாிசோதகா் மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளை கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், குறிப்பாக புரவிப் புயலின் தாக்கத்தின் பின்னா் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நிதி வழங்கல், கிணறுகள் துப்பரவு செய்தல் பொது இடங்கள் துப்பரவு செய்தல் உலா் உணவுப் பொருட்கள் வழங்கல் போன்ற பல செயற்பாடுகள் கடந்த 03 மாதங்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.