நெடுந்தீவில் இருந்து இன்று (ஜனவரி01) பகல் 11.30 மணிக்கு சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்ட கரிகணன் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தரைதட்டியதால் படகு சேதமடைந்ததுடன் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
படகு புறப்பட்டு குறுகிய நேரத்தில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நங்கூரமிடப்பட்டு திருத்தவேலையில் படகு பணியாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் கடும்காற்று காரணமாக நங்கூரம் உடைந்து படகு நெடுந்தீவு தாளைத்துறை கரையினை அண்டி தரைதட்டியதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
நிலைமையினை அவதானித்த பொது மக்கள், வெளியிணைப்பு இயந்திர படகுகளை கொண்டு படகில் இருந்த பணிகளை பத்திரமாக தரை இறக்கினர்.
இதேவேளை தரை தட்டிய படகினை சமுத்திர தேவா படகு மற்றும் , தரையில் இருந்த பொது மக்களும் இணைந்து படகினை பத்திரமாக கடற்பகுதிக்கு தள்ளியதுடன் , மாவிலித்துறைமுகப்பகுதிக்கு சமுத்திர தேவா படகுமூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.