கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்காலத் தலைவர்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் சங்கமம் என்னும் விழாவானது நேற்று(செப்ரெம்பர் 05) கரவெட்டி பிரதேச செயலகத்தினால் விக்னேஸ்வரா கல்லூரியில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வு விக்னேஸ்வரா கல்லூரி அதிபர் திரு.பொ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியபாலன் கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு “தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் ” எனும் தொனிப் பொருளில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி , பேச்சுப் போட்டி, மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்று பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Share this Article