கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் கடந்த 10ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில்,
இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதிய நேரத்தில் பாடசாலைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துக்குப் பின்னர் உடனடியாக அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாவது,
தாக்குதல் நடத்திய நபர் பழுப்பு நிற முடி மற்றும் அதே நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர், குறித்த சந்தேகநபர் துப்பாக்கிக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.