கனடாவிலிருந்து பணம் அனுப்பி யாழில் வாள்வெட்டு! – ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் அடங்கிய குழுவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுநேற்று சந்தேகநபரைக் கைது செய்தது.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடாவிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்

Share this Article