கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான ராஸ் லஃபான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அந்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்துள்ளது.