தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களது அங்கத்துவத்தினை உறுதிப்படுத்தி தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் “பி” அட்டை (B -Card) தற்போது கணணி மயப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.
இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த “பி”அட்டை (B -Card) பெறுவதற்கான விண்ணப்ப படிவம் நிறுத்தப்பட்டு புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு ஊழியரே நேரடியாக சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
பூரணப்படுத்தப்பட்ட புதிய படிவத்தினை தொழில் தருநர் உறுதிப்படுத்தி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுடன் இப் படிவத்துடன் ஊழியர் தனது தேசிய அடையாள அட்டை அல்லது வலுவிலுள்ள கடவுச் சீட்டுடன் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று பதிவினை மேற்கொண்டு கணணி மயப்படுத்தப்பட்ட “பி”அட்டையினை (B -Card) பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டோர் மீள செய்யவேண்டியதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது
புதிய படிவத்தினை தரவிறக்கம் செய்தல்.
Department or Labour Sri Lanka எனும் இணையத்தளத்திற்கு சென்று படிவங்கள்(Forms) பகுதியில் AH Form (New ) என கிளிக் செய்து புதிய படிவத்தினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.