கடலமைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 4 கடலமைகளை விற்பனைக்காக குருநகர் பகுதிக்கு கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிஸார் நேற்று (ஜூலை 31) காலை கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வீதியில் பயணித்த பட்டாரக வாகனமொன்றை வழிமறித்து சோதனையிட்ட போது வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளுக்குள் இருந்து 4 கடலாமைகள் உயிருடன் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வாகனத்தில் பயணித்த கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 32 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.

Share this Article