கடற்போக்குவரத்து சீர்ன்மையால் மக்கள் போக்குவரத்து பாதிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை என்பது ஒரு சீரான போக்குவரத்தின்மையால் மக்களது அன்றாடம் பல்வேறு அசெகளரியங்களுக்க முகம் கொடுத்து வருகின்றார்கள் வடதாரகை படகு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனது நேரத்திற்கான மாற்று படகு சேவை என்பது சில வேளைகளில் சரியான முறையில் செயற்படாமையால், மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுகின்றது.

இன்றைய தினம் (ஆகஷ்ட் 02) காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் துறை முகத்தில் இருந்து புறப்பட வேண்டிய படகு இன்மையால் மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் காணப்பட்டது நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் இருந்து காலையில் வருகை தந்தபோதும் அப்படகிற்கு இன்றைய தினம் மாலையில் திரும்புவதாகவே படகு அட்டவணை இருந்தபோதும் மக்கள் அதிகமாக இருந்தமையால் 9.30 மணிக்கு நெடுந்தீவுக்கான படகு சேவை இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

படகு அட்டவணைகள் போடபட்ட போது படகு சேவைகள் பூரணமாக இடம் பெறுவது குறைவாகவே காண்படுகின்றது எனவே எதிர்காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கான படகு சேவை இடம் பெறதாபோது மாற்று படகு சேவை ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் அல்லது போக்குவரத்து இடம் பெறாது என்பது ஏதாவது ஒரு முறையில் மக்களுக்கு தெரிவிக்கப்படல் வேண்டும்
காலம் காலமாக மக்களது கடற்போக்குவரத்து ஓர் பிரச்சனையாகவே நெடுந்தீவுக்கு காணப்படுகின்றது

Share this Article