By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும், மறு அறிவித்தல் வரைகடலுக்கு செல்ல வேண்டாம். – நாகமுத்து பிரதீபராஜா-
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும், மறு அறிவித்தல் வரைகடலுக்கு செல்ல வேண்டாம். – நாகமுத்து பிரதீபராஜா-
இலங்கைச் செய்தி

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும், மறு அறிவித்தல் வரைகடலுக்கு செல்ல வேண்டாம். – நாகமுத்து பிரதீபராஜா-

Last updated: 2024/12/11 at 7:17 AM
Published December 11, 2024 265 Views
Share
3 Min Read
SHARE

10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி வானிலை அவதானிப்பு.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலைதற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்து (Well Marked Low Pressure System) தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 325 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்குதிசை நோக்கி நகர்ந்து (அதன் உள் வளையம் வடக்கு மாகாணத்தினைஉள்ளடக்கியதாக நகர்ந்து) மன்னார் வளைகுடாவுக்கு செல்லும் எனஎதிர்பார்க்கப்படுகிறது ( நகர்வுப் பாதை மாற்றத்திற்கு உட்படும்)

இதன் உள் வளையத்தின் தென்னரைப்பகுதி  வடக்கு மாகாணத்தினூடாககரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவுமுதல்(11.12.2024) எதிர்வரும் 14.12.2024 வரை நாம் அனைவரும் சற்றுஎச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

நாம் எச்சரிக்கையாக இருந்து பாதிப்புக்கள் இல்லை என்றால் நாம்இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால் அசட்டையாக இருந்து பாதிப்புக்கள்இருந்தால் அதனை இலகுவாக நிவர்த்திக்க முடியாது.

நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காது சற்றுஅவதானமாக இருப்பது அவசியம்.

இது மழைக்காலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று வரைவடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரியான 1240 மி.மீ. இனை விட 705 மி.மீ. அதிகமாகக் கிடைத்து உள்ளது. கிழக்கு மாகாண ஆண்டுச் சராசரியான 1850 மி.மீ. இனை விட 580 மி.மீ. கூடுதலாக கிடைத்துள்ளது. இதனால் இனி 24 மணித்தியாலத்தில் 100 மி.மீ. இற்கு மேல் மழை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அதுயாழ்ப்பாண நகரம், கிளிநொச்சி நகரம், மன்னார் தீவு போன்ற தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினை உருவாக்கும்.

பொதுவாக விளக்கீட்டு காலப்பகுதியில்( கார்த்திகை தீபம்) நிச்சயமாக மழைகிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இம்முறையும் அந்த நம்பிக்கைஉண்மையாகும்.

இதன் காரணமாக இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளுக்கும் தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 14.12.2024 வரை தொடரும்வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக கன மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழைகிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை பகுதிகளுக்கு கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு (யாழ்ப்பாணம்), கிழக்கு(கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை), வட மேற்கு (மன்னார், புத்தளம்) தென்கிழக்கு(அம்பாந்தோட்டை ) கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில்காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக் காரணம் கொண்டும் மறு அறிவித்தல்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

இன்று இரவு முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம்மணிக்கு 50 கி.மீ. இனை விட அதிகமாக இருக்ககூடும்.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையின் கரையைக் கடக்கும் இடம் தெளிவாகஅறிந்த பின் மேலதிக விபரங்கள் இற்றைப்படுத்தப்படும்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR December 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் 1977 அழைக்கவும் !
Next Article மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் – ஆசிய அபிவிருத்தி உதவி !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?