கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (மார்ச்14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்காக கச்சதீவு இறங்குதுறையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக வழிபாடுகளின் பின்னர் புனித அந்தோனியாரின் திருக்கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
திருநாள் கொடி ஏற்றுவதற்கான கொடி மரமும் ஆலய முன்றலில் நாட்டுவதற்கான ஆயத்த பணிகளும் இடம்பெற்று வருகின்றது.
திருவிழா கடமைக்காக வருகின்ற அரச மற்றும் தொண்டு நிறுவன அலுவலர்களுக்கான இடங்கள் யாவும் தயார்ப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலய வளாகம் கடற்படையினரார் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஒலி, ஒளி அமைப்பு மற்றும் திருப்பலி இடம்பெறும் ஆலயத்தின் அருகே பாரிய பந்தல்களும் அமைக்கப்ட்டுள்ளது.