கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருநாள் திருப்பலி இன்று (மார்ச் 15) காலை 6.15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது.
திருநாள் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகை, யாழ்ப்பாணமறை மாவட்ட குரு முதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் கொழும்பு பிரதேச பங்குதந்தை சிஸ்வான் டீ குருஸ் அடிகளார், நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகள் மற்றும் பங்கு தந்தையர்கள் புனிதரின் கொடி மரத்தடியில் இருந்து மலர்மாலை அணிவித்து திருநாள் திருப்பலி இடம்பெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டு திருப்பலி ஆரம்பமாகியது.
திருப்பலி இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி லூர்துஆனந்தம் ஆண்டகை , யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோரின் தலைமையில் இந்திய இலங்கை பங்குத்தந்தையர்களின் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
காலை 9.30 மணியளவில் திருப்பலி நிறைவடைந்து புனிதரின் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவில் இருந்து 3400 பக்தர்களும் சுமார் 4000 பக்தர்கள் இலங்கையில் இருந்தும் அலைகடலாக திரண்டிருந்து கோடி அற்புதராம் அந்தோனியாரின் அருள் வேண்டி மன்றாடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.