கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதந்த மற்றும் மீளச்சென்ற ஆயிரக் கணக்கான பக்தர்களை தரையிறக்கும் பணியில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தினர் சிறப்பாக செயற்பட்டிருந்தமையினை காணமுடிந்தது.
நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் தலைமையிலான செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளை தலைவர் எ.அருந்தவசீலன் தலைமையிலான குழுவினர் இணைந்து படகுகளில் இருந்து பயணிகளை இறக்கி தீவுக்குள் அனுப்பி வைத்தல் மற்றும் மீள தங்கள் ஊர்களுக்கு அனுப்பும் பணிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.
இதேவேளை யாழ்இ- இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் இந்திய பக்தர்களை வரவேற்கும் வகையில் துறைமுகத்தில் பிரசன்னமாகியிருந்தனர். கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை மீட்பு ஆணியினரும் பக்தர்களை ஏற்றி இறக்குவதில் தங்கள் கடமையினை சிறப்பாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.