கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 14) மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவுக்கு வருகின்ற இந்திய இலங்கை பக்தர்களை பதிவு செய்வதற்கான பதிவு நிலையங்கள் கடற்படையினரால் தயார் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய பக்தர்களினை பதிவு செய்வதற்காக தனித்தனியாக நிலையங்கள் அமைக்கப்பட்டு காலைமுதல் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சிறு படகுகள் மூலம் பக்தர்கள் வருகை ஆரம்பித்துள்ளதுடன் இந்திய பக்தர்கள் காலை 9.00 மணிக்கு பின்னரே வருகைதர ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.