புதுக்குடியிருப்பு, அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டஇளைஞர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (மார்ச்12) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில்கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல்கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புநடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 22, 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 418 லீற்றர் கோடா ,60 லீற்றர் கசிப்பு மற்றும் 4 பீப்பாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (13) முல்லைத்தீவுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதசெயற்பாடுகளில் ஈடுபடும் சந்தேக நபர்கள் நபர்கள் கைது செய்யப்படுவதுடன்அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனபுதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.