கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 14) மாலை 4.15 மணியளவில் கொடியேற்றத்துடன ஆரம்பமாகியது.
திருச்செபமாலை நிகழ்வினை தொடர்ந்து திருச்சிலுவைப்பாதை என்பவற்றை தொடர்ந்து நற்கருணை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் நற்கருணை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றது.
ஆலய திருக்கொடியினை இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகை அவர்கள் ஏற்றிவைத்ததுடன் நற்கருணை திருப்பலி இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்டகுரு முதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோரின் தலைமையில் வருகைதந்த இந்திய இலங்கை பங்குத்தந்தையர்களுடன கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருபம் தாங்கிய கூட்டினை கடற்படையினர் தூக்கி ஆலயத்தினை வலம்வந்திருந்தனர்.
பல ஆயிரம் பக்தர்கள் அலைகடலாக திரண்டிருந்து கோடி அற்புதராம் அந்தோனியாரின் அருள் வேண்டி மன்றாடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.