கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருநாள் திருப்பலி இன்று (மார்ச்15) சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை ப. பத்திநாதன் அடிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், யாழ்-இந்தியா துணைத்தூதர் சாய்முரளி மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோருக்கு, இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகையினால் பொன்னாடை அணிவிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டது.
தங்களை சிறப்பாக வழிநடத்தி திருப்பலியை நடாத்திய இந்தியாவின்சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகைக்கு இந்திய பக்தர்கள் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.