கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக அங்குஇடம்பெற்றுவரும் நிலையில் குறித்த பணிகள் தொடர்பான கண்காணிப்புவிஜயத்தினை இன்றையதினம் (பெப். 14) மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நெடுந்தீவு பங்குத்தந்தை , நெடுந்தீவு பிரதேச செயலர் , கடற்படை அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 14, 15 திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிலையில் திருவிழாவுக்கு முன்பு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பில் இவ்விஜயத்தின்போதுஆரயப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் , ஆலய சூழலின் துப்பரவுப் பணிகளை ஏற்கெனவே கடற்படையினர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.