கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் யாழில் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பொக்கனையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த கோப்பாய் பொலிஸார், அவரிடம் இருந்து 6 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்தப் பெண்ணுக்கு எதிராகப் பலதடவைகள் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தபோதும், அவர் தொடர்ச்சியாகக் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article