ஓவியர் ரமணி அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, கலைப் பாதையில் பலரை வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இன்று (29/12) இறைவனடி சேர்ந்துவிட்டார்

அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள்.

நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட சிலைகளை அவர் வடித்திருந்தார்,

யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர்.

ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின. முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும், இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும்.

Share this Article
Leave a comment