ஓடும் பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம்!- ஐந்து பேர் சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று அதிகாலை (ஒக்ரோபர் 6) கொழும்பில் இருந்து தெனியாய நோக்கிப் பயணித்த பயணிகள் அரச பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article