2021ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக இலங்கை தமிழ் பெண்ணான அகல்யா என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பசறை தமிழ் தேசிய பாடசாலை விளையாட்டுதுறை ஆசிரியையாக கடமைபுரியும் செல்வி. அகல்யா. இதற்கு தெரிவான செய்தி பரவியதை தொடர்ந்து அவருக்கு பசறை மக்கள் உடப்பட உலக வாழ் தமிழர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்து பூப்பந்து (பெட்மின்டன்) போட்டிக்கு அலுவலராக செல்லும் முதலாவது நபராகவும் பெண்மணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு உலகளவில் தமிழர் சார்பில் முதல் பெண் நபராகவும் இவர் மாத்திரமே இவ்வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.