ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 200 பயனாளர்களுக்கு நிலக்கடலை செய்கையை ஊக்குவிக்கும் முகமாக நிலக்கடலை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (ஏப்ரல் 3) நடைபெற்றது.
சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், இந்த திட்டத்தின் இணைப்பாளருமான திரு.எஸ்.குணபாலன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் விவசாயிகளுக்கு நிலக்கடலையினை வழங்கி வைத்தார்.
மொத்தமாக 50 ஆயிரம் டொலர் பெறுமதியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் லங்கா ஜம்போ கச்சான் 100 பயனாளர்களுக்கும், திஸ்ச இன கச்சான் 100 பயனாளருக்கும் சிறுபோக செய்கைக்காக வழங்கப்படுகின்றது.
இன்றைய இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயராணி, பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜாமினி, மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.