ஐந்து மாவட்டங்கள் குடிநீரின்றி பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள 106 சிறிய நீரோடைகளில் நீர் குறைவடைந்துள்ள நிலையில், விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள விலங்குகளுக்கு போதுமான நீர் இல்லை எனவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article