ஐந்து புதிய தூதுவர்களும் இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்களும் இன்று (17/11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
1. கொரியக் குடியரசின் புதிய தூதுவராக கிம் யூன்-ஜங்
2. சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவராக டேனியல் ஹுன்
3. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக சில்வியா ஹார்ட்லீஃப்
4. எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக அஹ்மத் எல்-சயீத் அப்தெல் ஹலீம் அமெர் ஹெலால்
5. லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் புதிய தூதுவராக விதாயா சாயவோங்
6. நமீபியா குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி அலெக்ஸ் எல். டுகுஹுப்வேலே
7. சிங்கப்பூர் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக பேட்ரிக் டேனியல்
ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
நற்சான்றுப் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.