மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. இதன் காரணமாகவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், எதிர்வரும் 13 ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்காக அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.