எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ள நடாளுமன்ற அமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை கூடவுள்ளது.

இதற்கமைய, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30க்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது.

இந்தநிலையில், இன்று 2023 அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

நாளை பந்தயம், சூதாட்டம் விதிப்பனவு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article