எட்டுமாத இளம் கர்பிணித்தாய் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

திருகோணமலை வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்ப்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று(நவம்பர் 16) இடம்பெற்றுள்ளது.

மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கர்பிணித்தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுள்ளார்.

இதேவேளை, வைத்தியரின் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கான முழு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article