வடகிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்கள் சார்பினில் ஜனாதிபதிக்கு !
இன்றுடன் (ஏப்ரல் 28) எங்கள் சக சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம்சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கடந்து செல்கின்றது.
2009 முன்னராக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் மற்றும் ஈழநாதம் ஊடகப்பணியாளர் சுகந்தன் ஆகியோரையும் எங்கள் மனங்களில் நிறுத்திக்கொள்கின்றோம்.
இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதிகிடைக்கவில்லையோ, அதே போன்று படுகொலை செய்யப்பட்ட தராகிதர்மரட்ணம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.
பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன்கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான ஊடகப்படுகொலைகலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்லது காணாமல் போகவோ செய்துள்ளது.
அவர்கள் எவர் தொடர்பாகவும் இன்று வரை மாறி மாறி ஆட்சி பீடத்திலிருந்த எந்தவொரு இலங்கை அரசு வாய் திறக்க தயாராக விருந்திருக்கவில்லை.
தென்னிலங்கையினில் படுகொலையான அல்லது காணாமல் போயுள்ள எமது சகஊடக நண்பர்கள் லசந்த மற்றும் பிரகீத் தொடர்பான விசாரணைகளைஆரம்பித்ததுடன், ஊடகப்படுகொலைகளிற்கான விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க முன்னைய நல்லாட்சிஎனச்சொல்லிக்கொண்ட அரசும் பாடுபட்டிருந்தது.
இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஊடகசுதந்திரத்தை பேணிப்பாதுகாக்கவுள்ளதாகவும் ஊடக படுகொலையாளிகளை கைது செய்துசட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாகவும் சொல்லி ஆட்சிக்கதிரையேறியிருந்தது. எனினும் ஆறு மாதங்கள் கடந்துள்ள போதும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு சிறு துரும்பையேனும் நகர்த்தியதாக தெரிந்திருக்கவில்லை.
தென்னிலங்கை சகோதர ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் கூடதள்ளாடி வரும் நிலையினில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளை பெயரளவினில் கூட இந்தஅரசும் ஆரம்பிக்கவில்லையென்பதே உண்மையாகும்.
நல்லாட்சி காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கின்; அனைத்து ஊடகஅமைப்புக்களினையும் சேர்ந்தவர்களும் இலங்கை ஜனாதிபதி,பிரதமர்,ஊடகஅமைச்சர் என அனைவரையும் நாடாளுமன்றினில் ஒரே மேடையினில் சந்தித்துஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட மற்றும்
காணாமல் போயிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள்தொடர்பினில் சர்வதேச ஊடக அமைப்புக்களின் முன்னிலையில் நீதியானவிசாரணைகளை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினைமுன்வைத்திருந்தோம்.ஆனால் சலுகைகளை வழங்கி எமது நண்பர்கள்காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை தொடர்பில்கண்டுகொள்ளாதிருக்கவே அப்போதும் சொல்லப்பட்டது.
தமிழ் ஊடகவியலாளர்களதும் ஊடகப்பணியாளர்களதும் கொலைகளும்காணாமல் போதல்களதும் சூத்திரதாரிகள் இன்றுவரை சட்டத்தின் முன்நிறுத்தப்படாமை புதிய அரசு மீதும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நல்லாட்சி கால சலுகைகளை நாம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில் மீண்டும்சலுகைகளை தர எவர் முற்பட்டாலும் அவை வெற்றி பெறப்போவதில்லை.
அதேவேளை மீண்டும் அண்மைக்காலமாக வடகிழக்கினில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் பணியாற்ற ஏற்;பட்டுள்ள சூழலைகாரணங்காட்டி முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும்காணாமல் ஆக்குதல் தொடர்பிலான விசாரணைகள் பற்றிபேசாதிருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
குறிப்பாக ஊடக அடக்குமுறைகள் தொடர்பிலான குற்றவாளிகள்தண்டிக்கப்படாத சூழல் மீண்டும் கடந்த காலம் போன்றதொரு மோசமான சூழல்ஏற்படாதென்தை நிச்சயப்படுத்தமாட்டாது.
இதனை புதிய அரசின் கீழும் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் தமிழர்தாயகத்தினில் ஊடகவியலாளர் மீதுகட்டவிழ்த்து விடப்பட்ட சில சம்பவங்கள்அதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியே நிற்கின்றது.
இன்றைய தினம் வடகிழக்கு மற்றும் சர்வதேச அனைத்து ஊடகஅமைப்புக்கள்சார்பிலும் படுகொலையான மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடகப்பணியார்களிற்கு சர்வதேச ஊடக அமைப்புக்களின் கண்காணிப்பின் கீழான காலதாமதமின்றிய விசாரணை!
ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல்!
கொல்லபட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்குடும்பங்களிற்கு இடைக்கால நிவாரணம்!
ஆகிய எமது கோரிக்கைகளை மீண்டுமொருமுறை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும் இன்றைய நாளில் நாம் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.